Ariyalur Student: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மாணவிகள் அளித்த பதில்..!

த​ஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்
த​ஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்

Ariyalur Student: அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்க அப்பள்ளி மாணவிகள் பலர் வந்து உள்ளனர்.

அரியலூர் மைக்கேல்பட்டியை சேர்ந்த மாணவி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் பள்ளி ஒன்றில் படித்து வந்த அந்த மாணவி பூச்சு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி கொடுத்த டார்ச்சர்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

வார்டன் தொடர்ந்து வேலை வாங்கியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக மேஜிஸ்டிரேட் வாக்குமூலத்தில் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். ஆனால் மாணவியின் தற்கொலைக்கு மத மாற்றம்தான் காரணம் என்று பாஜக தரப்பு தெரிவிக்கிறது.

அந்த பள்ளி நிர்வாகம் மத மாற்றம் செய்ய சொல்லி கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது. தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தின் கெஸ்ட் ஹவுசில் தங்கி இருக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளை சந்தித்து மைக்கேல்பட்டி கிராம மக்கள் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள்.

கிராம் மக்கள் சார்பாக குழுவாக அறிக்கை ஒன்றும் அளிக்கப்பட உள்ளது. மாவட்ட எஸ்பி, பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரும் இங்கு வாக்குமூலம் அளிக்க வந்துள்ளனர். அதை தொடர்ந்து பள்ளியில் நேரடியாக பார்வையிட்டு அங்கு அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர். அதேபோல் அந்த மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். மேலும் மாணவியிடம் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் இன்று வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்க மாணவிகள் பலர் வந்து இருந்தனர். தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவியுடன் படித்த பல மாணவிகள் தேசிய குழந்தைகள் ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுக்க திரண்டு வந்தனர். அதில் சில மாணவியர் MirrorNow ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நான் அந்த பள்ளியில்தான் படிக்கிறேன். அந்த மாணவியை எனக்கு தெரியும்.

அவங்க ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்க கூடிய பெண். சிறப்பாக படிப்பார். அவரை வைத்துதான் எங்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். அந்த பெண்ணை போல நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த பொண்ணு மாதிரி நல்லா படிக்கணும் என்று எங்களுக்கு சிஸ்டர்கள் அறிவுரைகள் கூறுவார்கள். எங்களுக்கு அந்த மாணவிதான் உதாரணம். இங்கே மத மாற்றம் என்ற வேலையே இல்லை. அதெல்லாம் காரணமே கிடையாது.

சிஸ்டர் யாரும் மத மாற்றம் என்ற டாப்பிக்கை யாரும் பேச மாட்டார்கள். யாரும் எங்களுக்கு மத ரீதியாக அழுத்தம் கொடுத்ததே இல்லை. எங்களிடம் சிஸ்டர் படிப்பை பற்றி மட்டுமே பேசுவார்கள்.. வேறு எதை பற்றியும் பேசியது இல்லை, என்று மாணவி குறிப்பிட்டுள்ளார். இன்னொரு மாணவி அளித்த பேட்டியில், அந்த மாணவியின் மரணத்திற்கு மத மாற்றம் காரணம் இல்லை.. மாணவிகள் எல்லோரும் சேர்ந்து அறிக்கை ஒன்றை தேசிய குழந்தைகள் கமிஷனிடம் அளிக்க உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை பள்ளியில் நேரடியாக பார்வையிட்டு அங்கு அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Rajendra Balaji: ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்..!