மதுரை எய்ம்ஸ்-க்கு தலைவர் நியமனம்

மதுரை தோப்பூரில் ரூ.1300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவனைக்கு புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையின் தலைவராக உள்ள வி.எம்.கடோச் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள டாக்டர். சுதா சேஷய்யன் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், அண்மையில் சென்னையில் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கிய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் நிர்வாகியான டாக்டர். சண்முகம் சுப்பையா உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.