‘என் உயிருக்கு ஆபத்து; முதல்வர் அய்யா உதவ வேண்டும்’ – சீனு ராமசாமி ட்வீட்

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் என்றும் முதலமைச்சர் உதவ வேண்டும் என பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.

அண்மையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். தற்போது இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கும், இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா அல்லது இவர் இயக்கும் படத்திற்கான ஏதேனும் புரமோஷனா என நெட்டிசன்கள் புரியாமல் தவித்து வருகின்றனர்.