சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (29.10.20) ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் வசதிக்காக இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, தொடர் விடுமுறை காரணமாக நாளை (29.10.20) வியாழக்கிழமை மட்டும் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மிலாது நபி, அரசு விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.