கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.
தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது நவம்பர் 1 ம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது 2021 -22 ஆண்டின் 1 முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் 11 ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இதற்கு தேசிய கல்வி தொகை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் !



