தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தற்போது நான்கு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு நீலகிரி உள்ளது.
அரும்பொருட்களில் ஒன்றான நிலக்கரி, நமக்கெல்லாம் மின்சாரத்தைத் தந்து, அதன்மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியையும், விவசாய வளர்ச்சியையும், பொருளாதாரத்தையும் வெகுவாக உயர்த்த உறுதுணையாக இருக்கிறது.
தினசரி 64,000 டன் நிலக்கரி அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசின் நிறுவனத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், 20,000 டன் நிலக்கரி குறைவாக மத்திய அரசின் நிறுவனத்தால் அனுப்பப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !



