சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இன்று வெளியாகிறது !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு தனது விடாமுயற்சியால் சென்றவர்.மேலும் இவருக்கு சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை என அணைத்து தரப்பிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.

தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் உருவாகியுள்ளது.இதில் ப்ரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். வில்லனாக வினய் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் நீண்ட நாட்களாக தள்ளி கொண்டே போனது.இன்று சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இன்று ரிலீஸ் ஆவதை தொடர்ந்து பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் , நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி.. டாக்டர் படம் இன்று முதல் தியேட்டர்களில்.. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டு மகிழுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் !