வட அரபிக்கடலில் ஷாகீன் என்ற புயல் நாளை காலைக்குள் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 26ம் தேதி குலாப் என்ற புயல் ஆந்திராவில் கரையை கடந்தது.தற்போது வட அரபிக்கடலில் உருவாகும் ஷாகீன் என்ற புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வரும் 3 நாட்களுக்கு மகாராஷ்டிரா, குஜராத் கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் மீனவர்கள், 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : அட இவர்கள் தான் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களா !



