சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் குறித்த அப்டேட் !

தமிழ் சினிமாவின் தலைவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.குழந்தை முதல் பெரியவர் வரை யாரைக்கேட்டாலும் ரஜினி ஸ்டைல் தெரியும்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படம் ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.மேலும் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 ம் தேதி வெளியாகிறது.

இதனால் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.

மேலும் நாளை காலை 11 மணிக்கு அண்ணாத்த ஃபஸ்ட்லுக் போஸ்டரும், மாலை 6 மணிக்கு அண்ணாத்த மோஷன் போஸ்டரும் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.