அரியர் தேர்வுகள் நடைபெறும்- அண்ணா பல்கலைக்கழகம்

அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி உள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அரியர் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது. அதில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் அரியர் தேர்வுகளை எழுத கட்டணம் செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.