ஆன்மீகம் எடுபடும் ஆனால் ஆன்மீக அரசியல் எடுபடாது – கே.எஸ் அழகிரி

தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும் ஆனால், ஆன்மீக அரசியல் எடுபடாது என்றும் ஆன்மீக அரசியல் அதிகாரத்தை நோக்கி செல்லாது என ரஜினியின் அரசியல் வருகை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல் மற்றும் ராகுல் காந்தி தமிழக வருகை குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி, வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாகவும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல ஒரு தேவதூதன் போல அவர் தமிழகம் வர இருப்பதாகவும் எடப்பாடி, மோடி இருவரையும் வீழ்த்த தமிழகம் முழுவதும் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.