‘இந்தியப் பொருளாதாரம் 7.5 விழுக்காடு சரியும்’ – சக்திகாந்த தாஸ்

2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 விழுக்காடு சரிவடையும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி 7.5 விழுக்காடு சரியும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கரோனா தடுப்பு மருந்து குறித்த நேர்மறையான தகவல்கள் காரணமாக பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட விரைவில் மீளும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.முன்னதாக, 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5 விழுக்காடு சரியும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.