இன்று அழகு அஞ்சலியின் பிறந்தநாள்..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பின் பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். தமிழ் போக தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலிலும் விழுந்தார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

எங்கேயும் எப்போதும், இறைவி, பேரன்பு உள்ளிட்ட சில படங்களில் தனது நடிப்புத்திறமையையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.