படப்பிடிப்பை தொடங்கிய “பிசாசு 2” டீம்..!

ஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015-ம் ஆண்டு ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பாட்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை அப்படியே ‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக உருவாக்கி இருந்தது படக்குழு.

இப்படத்திற்காக திண்டுகல்லில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து முடிந்த நிலையில், தைப்பூசம் திருநாளான நேற்று “பிசாசு 2” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.