விண்வெளி சென்று திரும்பிய அமேசான் நிறுவனர் !

எல்லோருக்கும் விண்வெளி பயணம் சென்று அங்கு எவ்வாறு உள்ளது என்று பார்க்க எண்ணம் தோன்றும்.இதை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் செய்துள்ளார்.

ஜெஃப் பெஸோஸ் சொந்த ராக்கெட்டில் தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளார்.

இந்த பயணத்தில் ஜெஃப் பெஸோஸுடன் அவருடைய சகோதரர் மார்க் பெஸோஸ், சிறப்பு கவுரவ விருந்தினராக வேலி ஃபங் என்ற விண்வெளி வீராங்கனை மற்றும் ஆலிவர் டீமன் என்ற பணக்காரர் ஆகியோர் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து ப்ளூ ஆரிஜின் ராக்கெட் புறப்பட்டது.சில நிமிடங்களில் விண்வெளியைத் தொட்ட ராக்கெட் பின்னர் மீண்டும் பத்திரமாகத் தரையிறங்கியது.