கருணாநிதி தான் என் அரசியல் ஆசான் – குஷ்பூ !

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாஜக பொறுப்பாளருமான குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசிய போது ,தமிழகம் முழுவதும் பாஜக வலுப்பெற்று வருகின்றது.கூட்டணி, தொகுதிகள் பற்றி தலைமை தான் முடிவு செய்யும்.

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் மக்கள் பணிக்கு வரலாம். தேர்தல் முடிவில் தான் அவர்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறதா என்பது தெரியும்.என்னுடைய அரசியல் ஆசான் கருணாநிதி மட்டும் தான். ஆனால் கலைஞர் காலத்தில் இருந்த திமுக தற்போது ‌இல்லை என்றார்.