ரஷ்யாவில் 5000 கி.மீ., பைக் டிராவல் செய்த நடிகர் அஜித்

ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அஜித், அந்த நாட்டில் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக இயக்குநர் எச். வினோத், தல அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். இரண்டு ஆண்டுகளாக நீண்டு கொண்டே சென்ற வலிமை படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்து படக்குழுவினர் மீண்டும் சென்னைக்கு நேற்று திரும்பினர்.

டிராவல் ஃப்ரீக்கான தல அஜித் ரஷ்யாவையும் ஒரு ரவுண்டு அடித்து விடுவோமே என நினைத்து பைக்கிலேயே சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் ரஷ்யாவில் பைக் டிராவல் செய்துள்ள வேற மாறி தகவல் மற்றும் அதன் புகைப்படங்கள் வெளியாகி தல ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.