கூகுள் பே ஆப்பில் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு அறிமுகம்

டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவது, நிதி சார்ந்த தேவைகளுக்கு கூகுள் பே (Google Pay) ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூகுள் பே ஆப் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக எக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் (Equitas Small Finance Bank) கூகுள் பே கூட்டணி அமைத்துள்ளது. பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்ய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். ஆனால், கூகுள் பே ஆப் மூலம், வங்கிக் கணக்கு இல்லாமலேயே ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்ய முடியும்.

அதிலும், தற்போது வங்கிகளில் சராசரியாக ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டியை காட்டிலும் அதிக வட்டி கிடைக்கிறது. கூகுள் பே மூல வாடிக்கையாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் முதலீடு செய்யலாம் என எக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.