அதிமுக பொதுக்குழு கூட்டம் !

ஜனவரி 9ல் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில்,அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 8.50 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட உரிய கரோனா கால பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.