ஆன்லைனில் விளையாடும் ரம்மி ஆட்டத்திற்கு தடையா !

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்த தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் புதிதாக வழக்குத் தொடர்ந்துள்ளது.

அப்போது, கேம்ஸ்கிராப்ட் தரப்பில் வெளியில் சென்று ரம்மி விளையாடுவதைவிட, ஆன்லைனில் விளையாடுவது பாதுகாப்பானது. ரம்மி என்பது விளையாட்டு மட்டுமல்ல, திறமையை வளர்க்கக்கூடியது. கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் குதிரை பந்தய வழக்குகளில் முன்னுதாரணங்கள் சொல்லி வாதிடப்பட்டது.

குதிரை பந்தயமும், ரம்மியும் ஒன்றாக கருத முடியாது. பெற்றோர்களின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பிள்ளைகள் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதாகவும் குற்றம்சாட்டினர். தமிழ்நாடு அரசு பதிலளிக்க இறுதி அவகாசம் வழங்கி, இறுதி விசாரணையை ஜனவரி 18ஆம் தேதி தள்ளிவைத்தனர்.