அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சரை பாராட்டி தீர்மானம்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை தமிழக அரசு தடுத்து நிறுத்தியதாக கூறி அதிமுக செயற்குழுவில் பாராட்டு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை அறிவித்த தமிழக அரசுக்கு அதிமுக செயற்குழுவில் பாராட்டு

அதிமுக அரசு தொடர அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று தீர்மானம்

ரூ.14 ஆயிரம் கோடி செலவில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி

இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நினைவிடங்களை அழகுற அமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி

11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி பெற்ற தமிழக அரசுக்கு நன்றி

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இதர திட்டங்களுக்கான மானியத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்கிற கருத்தில் அதிமுக உறுதியாக இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here