கூட்டுறவு வங்கியில் விவசாய கடன்கள் தள்ளுபடி..!

புதுச்சேரியில் ரூ. 9,924 கோடி மதிப்பிலான 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் என்.ரங்கசாமி தாக்கல் செய்தார்.

புதுச்சேரி தாக்கல் செய்யப்பட்ட 9,924 கோடி பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. குறிப்பாக இந்த நிதிநிலை அறிக்கையில், ரூ.2140 கோடி சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கும், ரூ.1715 கோடி கடன் மற்றும் வட்டிக்கும், ரூ.1591 கோடி மின்சாரம் வாங்கவும், ரூ.1290 கோடி முதியோர் ஓய்வூதியத்திற்கும், ரூ.1243 கோடி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலை சுற்றி தேரோடும் நான்கு வீதிகளையும் செப்பனிட ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது