புத்தகப்பையில் இருக்கும் ஜெயலலிதா மற்றும் இ.பி.எஸ் புகைப்படத்தை மாற்ற தேவையில்லை என்ற தமிழக முதல்வர் !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வரானார்.இந்நிலையில் கடந்த 13 ம் தேதி சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பையில் இருக்கும் முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறியதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.32,599.54 கோடி மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியதாக கூறினார்.