தமிழகத்துக்கு மீண்டும் புதிய புயல் வர வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 30-ம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் 3 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். அதேபோல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றால் தென் தமிழகப் பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.