ஆப்கன் மக்களுக்கு ஒருவேளை உணவு கூட கிடைக்காது- மிஸ் அலக்பரோவ்

ஆப்கன் மக்களுக்கான உணவுப் பொருட்கள் கையிருப்பு இந்த மாதத்துடன் தீர்ந்து விடும் என அந்த நாட்டுக்கான ஐ.நா., துணை சிறப்பு பிரதிநிதி ரமிஸ் அலக்பரோவ் எச்சரித்து உள்ளார்.

அதன் பின் ஒரு கோடி பேருக்கு அன்றாடம் ஒருவேளை உணவு கூட கிடைக்காத நிலை ஏற்படும். இவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க குறைந்த பட்சம் 1,500 கோடி ரூபாய் தேவைப்படும். ஆப்கனில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இக்குழந்தைகளுக்கு இனி உணவு கூட கிடைக்காத நிலை உண்டாகும்.

காபூல் விமான நிலையத்தில் மட்டும் 800 குழந்தைகள் உள்ளனர்.உலக நாடுகள் ஆப்கன் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்களை வழங்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.