ADMK: அதிமுக 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அதிமுக 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ADMK: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 30 தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பாஜக – அதிமுக கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு குறித்து விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், பாஜக-அதிமுக கூட்டணி முறிந்தது.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் நாமக்கல், திருப்பூர், கோவை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அதிமுக சார்பில் ஏற்கனவே மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்திருந்நிலையில் தற்போது நான்காவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்