Budget 2022: 2023 -ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி துவங்கப்படும்- நிர்மலா சீதாராமன்

5G Technology
2023 -ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி துவங்கப்படும்

Budget 2022: 2025-க்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 5ஜி அலைகற்றை ஏலம் 2022-ல் மேற்கொள்ளப்படும்

2023 ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி துவங்கப்படும்.

2025-க்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும்

அனைத்து கிராமங்களிலும் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும்

புதிய சட்டத் திருத்தங்கள் உடன் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மாற்றியமைக்கப்படும்

திவாலான நிறுவனங்களை மூட கால அவகாசம் 2 வருடங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்படும்

நகர்ப்புறங்களில் பொது போக்குவரத்து பயன்பாடு ஊக்குவிக்கப்படும்.
மெட்ரோ திட்டங்கள் மூலம் நகர்ப்புற போக்குவரத்து மேம்படுத்தப்படும்.

மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க ‘பர்வத்மாலா’ திட்டம்ராணுவ தளவாடங்கள் தேவையில் 68% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்.

மின்சார வாகனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

அரசின் மூலதன செலவுகள் 2022-23ல் ரூ.7.50 லட்சம் கோடியாக அதிகரிப்பு
நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் ரசாயனம் உற்பத்தி செய்ய 4 புதிய தொழிற்சாலைகள்

இதையும் படிங்க: ADMK: அதிமுக 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு