Budget 2022: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம்- நிதியமைச்சர்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம்

Budget 2022: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2022- 23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

*இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் கணக்கிடப்பட்டு உள்ளது.

*கோவிட் காலகட்டத்தில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோம்.

*ஒமைக்ரானின் பாதிப்பில் இருக்கிறோம். மிக நீண்ட தடுப்பூசி முகாம் நடத்தி கொண்டிருக்கிறோம்

*டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பருவநிலை மாற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

*சுகாதார உள்கட்டமைப்பு வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

தொலைநோக்கு திட்டங்களுடன் பயணித்து வருகிறோம்.ஏழை மக்களுக்கு இலவச காஸ் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

*நடுத்தர மக்கள் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

*அடுத்த 25 வருடம் இந்தியா எப்படி இயங்கப்போகிறது என்பதற்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

*வெளிப்படை தன்மையுடன் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

*5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது.
  • உலகிலேயே இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
  • பிரதமரின் கதிசக்தி, உற்பத்தி, உள்ளிட்ட 4 விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்
  • கதிசக்தி திட்டத்தின் கீழ் போக்குவரத்து கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
  • அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம்- பொதுததுறை முதலீட்டை அதிகரிப்பதே நோக்கம்.
  • 400 புதிய ரயில் வழித்தடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
  • 100 கார்போ டெர்மினல்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும்.

*வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்தப்படும்.

*ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும்

*எண்ணெய் வித்துகள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

*தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக ரூ.25 ஆயிரம் கோடியில் திட்டங்கள் *மலைப்பகுதியில் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்த அரசு மற்றும் தனியார் துறை ஒத்துழைப்புடன் நடவடிக்கை

*டுரோன்கள் மூலம் பயிர்களை ஆய்வு செய்ய திட்டம்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்