அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் !

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இவருக்கு வயது 81 .உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இன்று இவர் காலமாகியுள்ளார்.

அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், கடந்த சில மாதங்களாக, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சிரமப்பட்டு வந்தார்.மேலும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் .

மேலும் அதிலிருந்து மெல்ல உடல்நலம் தேறினார். ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று மாலை மதுசூதனன் காலமானார்.இவரது மறைவிற்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.