நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

நடிகர் தனுஷ் தனது சொகுசு காருக்குச் செலுத்த வேண்டிய பாக்கி நுழைவு வரியை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் 2015-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.அவருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் , மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.இந்நிலையில் மீதமுள்ள நுழைவு வரியில் ரூ. 3030357 லட்ச ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.