அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை வெளியீடு !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்,அதிமுக மற்றும் திமுக இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

தற்போது அதிமுக வெளியீட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அதிரடியாக பல அம்சங்கள் உள்ளன.இதை ஓ.பன்னீர்செல்வம்,எடப்பாடி பழனிச்சாமி இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை,வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை,அனைவருக்கும் வீடு அம்மா இல்லம் திட்டம்,அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்,நீட் தேர்வுகளுக்கு இலவச நுழைவுத் தேர்வு பயிற்சி.

மேலும் ,விலையில்லாத அரசு கேபிள் திட்டம் அறிமுகம்,மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும் மற்றும் முதியோர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும் என பல அம்சங்கள் உள்ளன.