அதிமுக கொடியை பயன்படுத்தும் அதிகாரம் சசிகலாவுக்கு உண்டு- டிடிவி தினகரன்

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். எனவே அதிமுக கொடியை பயன்படுத்தும் அத்தனை அதிகாரமும் சசிகலாவிற்கு உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

செயற்குழு பொதுக்குழு கூட்டும் அதிகாரம் சசிகலாவிற்குதான் உள்ளது. அவர் பயன்படுத்திய கார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய கார்.

7 நாள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்புவார். அமமுக தொடங்கியது அதிமுகவை மீட்டெடுக்கத்தான். அதிமுக-வை மீட்டெடுக்கும் நடவடிக்கை தொடரும். சசிகலா தமிழகம் வந்த பின்னர் அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.