நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கை !

கரோனா தொற்று காரணமாக தியேட்டர்களில் மூடப்பட்டன.மேலும் சூர்யா போன்ற சூப்பர் ஸ்டாரின் படங்கள் கூட ஒ.டி.டி.யில் வெளியானது. இதனை தொடர்ந்து 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது.இதற்கிடையே தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அங்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.