அதிர்ச்சி..பொதுமக்களின் ஆதார் விவரங்கள் லீக் !

ஆதார் என்பது 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும்.ஆதார் உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் ஐடி அமைப்பு.தற்போது தமிழகத்தில் பொது வினியோக திட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

இதில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன என பெங்களூரை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசன்ட் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,59,485 பேரின் மொபைல் எண்கள், மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் நம்பர்கள் வெளியாகி இருக்கின்றன என தெரிவித்துள்ளது.