கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி மக்களை வெகுவாக வாட்டி வதைக்கிறது.சில நாடுகளில் கொரோனா தொற்றின் அலை இரண்டு,மூன்று என பரவி வருகிறது.
தற்போது பிரிட்டனில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவு அதிகபட்சமாக ஒரே நாளில் 26,000 பேர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 26 ஆயிரத்து 68 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர். தடுப்பூசியை செலுத்தியதன் விளைவாக பலி எண்ணிக்கை குறைவாகி உள்ளது. என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுவரை அங்கு 80 % பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 60% பேருக்கு இரண்டும் டோஸும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



