அடுத்து வருகிறது வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு !

ஆதார் அடையாள அட்டை என்பது 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். போலி வாக்காளர்களை தடுக்கும் பொருட்டு, வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.

மேலும் ஆதார் என்னுடன் பான் எண் இணைப்பு கட்டாயம் என்று அரசு அறிவித்தது.தற்போது வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஒருவரின் பெயர் பல தொகுதிகளில் இடம்பெறுவதை தடுக்க ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும். ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பான பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.