பிரமாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படம்..இதில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் !

பொன்னியின் செல்வன் படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது.இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இப்படம் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எந்த நடிகர், எந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தெரியாமல் இருந்தது.

தற்போது கதாபாத்திரம் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தப் பட்டியலைப் படக்குழுவினர் வெளியிடவில்லை.

சுந்தர சோழர் – பிரகாஷ்ராஜ்,ஆதித்ய கரிகாலன் – விக்ரம்,அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி,
வந்தியத் தேவன் – கார்த்தி,குந்தவை – த்ரிஷா,நந்தினி – ஐஸ்வர்யா ராய்,பூங்குழலி – ஐஸ்வர்யா லட்சுமி,வானதி – ஷோபிதா,பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்,சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்,கடம்பூர் சம்புவரையர் – நிழல்கள் ரவி,மலையமான் – லால்.

ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்,அநிருத்த பிரம்மராயர் – பிரபு,சோமன் சாம்பவன் – ரியாஸ் கான்,ரவிதாசன் – கிஷோர்,சேந்தன் அமுதன் – அஸ்வின்,கந்தன் மாறன் – விக்ரம் பிரபு,மதுராந்தகன் – அர்ஜுன் சிதம்பரம்,பார்த்திபேந்திர பல்லவன் – ரஹ்மான்,குடந்தை ஜோதிடர் – மோகன்ராம்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது