சரண்யா – பொன்வண்ணன் மகள் திருமண கொண்டாட்டம் !

தமிழ் சினிமாவில் பிரபலமான தம்பதியர் சரண்யா மற்றும் பொன்வண்ணன் அவர்கள்.இவர்கள் இருவரும் யதார்த்த நடிப்பில் அசத்துபவர்கள்.தமிழ் சினிமாக்களின் அனைவர்க்கும் பிடித்த அம்மா என்றால் அது சரண்யா தான்.

இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள்.இவர்கள் மூத்த மகள் ப்ரியதர்ஷினிக்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சியதார்தம் நடைபெற்றது.அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில்,அவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் நிகழ்வில் பங்கேற்றார்.