பண மோசடி வழக்கில் நடிகர் கார்த்தி பட நடிகை கைது !

நடிகை லீனா மரியா பால் இவர் கார்த்திக் நடித்த பிரியாணி படத்தில் நடித்துள்ளார்.தற்போது இவர் ரூ. 200 கோடி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ 18 கோடி மோசடி செய்ததாக இவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்.மேலும் இவர் மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார்.

தொழில் அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதியிடம் ரூ. 200 கோடி ஏமாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.மேலும் இவர் மோசடி வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.

மருந்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டார் அவரிடம் இருந்து 200 கோடி பணத்தை பெற்று மீண்டும் கைதாகியுள்ளார் சுகேஷ்.இதில் லீனாவும் உடந்தை என சொல்லப்படுகிறது. இதனால் நேற்றைய தினம் நடிகை லீனாவையும் போலீஸார் கைது செய்தனர்.மேலும் அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.