உருளைக்கிழங்கு சாப்பிட்டு சம்பாதிக்கலாம்..அடடா இப்படி ஒரு அறிவிப்பா !

இங்கிலாந்து நாட்டிலுள்ள தி பாட்டனிஸ்ட் என்ற உணவகம் உருளைக்கிழங்கு சாப்பிட்டு எப்படி இருக்கு என்று சொல்லுபவர்க்கு மாதம் ரூபாய் 50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது.வேடிக்கையாக இருந்தாலும் இது உண்மை தான்.

இது வெண்ணிலா கபடி குழு படத்தில் வருவது போல அதிகம் பரோட்டா சாப்பிட்டால் பில் கிடையாது என்பது போல வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டு அதன் ருசியை சொல்லுபவர்க்கு 50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த விளையாட்டில் வறுத்த உருளைக்கிழங்கை மக்கள் சோதிக்க வேண்டும். சோதனையாளர் ஒப்புதல் அளித்தவுடன் மட்டுமே அது விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நீங்கள் உருளைக்கிழங்கை பிரியர் என்றால் , இது உங்களுக்கு சரியான வேலைவாய்ப்பு என்று தெளிவாகக் கூறுகிறது.

இதன் நோக்கம் என்ன வென்றால் மக்களுக்கு சுவையான உணவை கொடுக்க இப்படி ஆள் எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த வேளைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 10ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.