தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் கங்கனா..!

நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் கருத்து என்கிற பெயரில்ல் பாஸிசத்தை தொடர்ந்து உமிழ்ந்து வருகிறார் என நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தற்போது இன்னொரு சர்ச்சையிலும் அவர் சிக்கியிருக்கிறார்.

இந்தியாவில் இப்போது மக்கள் இறந்து கொண்டிருப்பதற்கு காரணம் அதன் மக்கள் தொகை தான் என்று குற்றம்சாட்டியிருக்கும் கங்கனா, இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி. சட்டவிரோதமாக 25 கோடி பேராவது குடியேறியிருப்பார்கள்.

ஆனால், இந்தியாவைப் போல் நிலப்பரப்பில் 3 மடங்கு இருக்கும் அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 3-வது குழந்தை பெற்றுக் கொள்கிறவர்களுக்கு சிறைத்தண்டனை தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலோட்டமாகப் பார்த்தால் கங்கனா சொல்வது சரி தானே எனத் தோன்றும். ஆனால், அதனை இவர் எந்த நேரத்தில் சொல்கிறார் என்பது முக்கியமானது. ஒரு பேரிடர் நிகழ்கையில், அதனை சரியாக கையாளாத அதிகார வர்க்கத்தை விமர்சிக்காமல் மொத்த பழியையும் மக்கள் மீது சுமத்துவதுதான் பாஸிசக்கோட்பாடு. அதையேத்தான் கங்கனாவும் செய்திருக்கிறார், என விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.