நடிகை தீபிகா படுகோனே இன்று விசாரணைக்காக ஆஜார்

நடிகை தீபிகா படுகோனே இன்று விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே இன்று விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.