நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி !

நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.அதற்கு பிறகு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவர் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.