அடுத்து OTT யில் வரும் மக்கள் செல்வன் படம் !

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் அணைத்து படங்களும் OTT யில் வெளியாகின.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.ஓடிடியில் வெளியான படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்து வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.இந்த படத்திற்கு ரசிகர் இடையே நிறைய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் ,காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் சன் தொலைக்காட்சியில் வெளியானது,அனபெல் சேதுபதி நேரடியாக ஓடிடியில் வெளியானது.மேலும் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் போன்ற படங்களும் oTT யில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மக்கள் கவனத்திற்கு..வங்கி காசோலைகள் செல்லாது !