பிரபல நடிகருக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை !

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பிரபமான நடிகர் சித்தார்த்.பாய்ஸ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

தற்போது மகா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் இந்த படத்தில் நடித்துள்ளார்.

சித்தார்த் ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு டோலிவுட்டில் மகா சமுத்திரம் படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். ஆர்எக்ஸ் 100 புகழ் அஜய் பூபதி இயக்கிய மகா சமுத்திரத்தில் ஷர்வானந்த், சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகா சமுத்திரம் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

மேலும் அவருக்கு லண்டன் யில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.பட காட்சிகளில் நடிக்கும் பொது முதுகெலும்பில் அடிபட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார்.தற்போது நலமாக உள்ளதாகவும் இந்தியா திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மக்கள் கவனத்திற்கு..வங்கி காசோலைகள் செல்லாது !