நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு அதிரடி காட்டிய மாஸ்டர் தயாரிப்பாளர்

ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மாஸ்டர் பட தயாரிப்பாளர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் இதுவரை நடித்த 64 படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.