சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் !

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, வேல மூர்த்தி, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதியான தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.மேலும் oct 4 ம் தேதி படத்தின் சிங்கிள் பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது.மேலும் இந்த பாடல் பாடிய எஸ்பிபி குறித்து ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் குறித்து உருக்கமான பதிவை ஒன்றை போட்டுள்ளார்

இந்நிலையில் இப்படத்தின் 2 வது பாடல் சிங்கிள் நாளை மாலை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷ்ரேயா கோஷல் குரலில் பாடியுள்ளார்.சாரக்காற்றே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.