பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பு !

கொரோனா தொற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த உலகை தன் வசமாக்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பயணிகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை இரு டோஸ் செலுத்த இந்தியர்கள் 10 நாட்கள் பிரிட்டனில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்திருந்தது.

தற்போது அது தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.இது குறித்து கூறுகையில்,வரும் 11 ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள் கோவிஷீல்ட் இரு டோஸ் அல்லது வேறு எந்த கரோனா தடுப்பூசியும் இரு டோஸ் செலுத்தி இருந்தால், அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு நாட்டுப் பயணிகளும் தடையின்றிச் செல்லலாம். இரு நாடுகளுக்கு இடையே அதிகமான விமான சேவையும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் உயரும் தங்கத்தின் விலை !