பிக் பாஸ் பிரபலமான மஹத் அப்பாவாகிறார் !

நடிகர் மஹத் மங்காத்தா ,ஜில்லா போன்ற பண்டங்களில் நடித்தவர்.மேலும் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்.

அந்த நிகழ்ச்சியில் மூலம் மஹத் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மஹத் தனது காதலியும் மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இன்று தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக மஹத் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், இன்று காலை கடவுள் ஆசீர்வாதத்துடன் ஆண்குழந்தை பிறந்ததுள்ளது. நானும் பிராச்சியும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம். எங்களுக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தவர்களும் நன்றி என்று தெரிவித்திருந்தார்.