இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளது.கரோனா தொற்று வந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது.அதிகரிக்கும் விலையால் பிற பொருள்களின் விலைவாசியும் உயரும் சூழல் உருவானது.

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.96.71ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.90.92 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ நகரங்களில் மும்பையின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .101.52 நெருங்கியுள்ளது.அதிகமாக ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கநகர் மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே லிட்டருக்கு ரூ .106.37 ஆகவும், லிட்டருக்கு ரூ .99.23 ஆகவும் உள்ளது.